சைவ சித்தாந்தம்: உண்மை விளக்கம்
60 questions/62 slides
சைவ சித்தாந்தம்: உண்மை விளக்கம்

Create a Quiz
Create interactive quizzes with real-time questions and answers. Keep your audience engaged with instant feedback and live leaderboards. Use AI assistance to create quizzes quickly and easily.

Host Live Quiz Game
Host a live game and watch answers pop up in real time. Track every participant's score, announce winners, and celebrate top performers. Anyone can join by scanning a QR code or entering a game code.
QUESTIONS IN THIS QUIZ
1. உண்மை விளக்கம் நூலின் ஆசிரியரைக் குறிப்பிடுக ?
- மெய் கண்டார்
- மனவாசகம் கடந்தார்
2. போதானந்தப் பொருள் என்று ஆசிரியர் எதனைக் குறிப்பிடுகிறார்?
- சிவபரம் பொருள்
- பேரின்பம்
3. சுத்த வினா என்றால் என்ன?
- உயிரின் தன்மை பற்றிய வினா
- ஆன்மாவின் பாச நீக்கம் பற்றிய வினா
4. உடல் மற்றும் உலகம் முதலியவை எவற்றால் ஆனவை?
- ஐம்பெரும்பூதங்கள்
- வல்வினைகள்
5.கோடிட்ட இடத்தை நிரப்புக ;
ஆன்மா ________________ ஆம்இவற்றால் உற்று.
6. ஆறாறு தத்துவங்கள் யாவை?
- ஆன்ம தத்துவங்கள் 24, சுத்த தத்துவங்கள் 7 ; சிவ தத்துவங்கள் 5
- ஆன்ம தத்துவங்கள் 25, வித்தியா தத்துவங்கள் 6 , சிவ தத்துவங்கள் 5
- ஆன்ம தத்துவங்கள் 24 , வித்தியா தத்துவங்கள் 7, சுத்த தத்துவங்கள் 5
7. ஆன்ம தத்துவங்கள் எவற்றை உரைக்கின்றன ?
- உடலும், உலகமும் எவ்வாறு தோன்றியது என்பதை உரைக்கின்றன.
- ஆன்மாவின் அனுபவத்திற்கு உற்ற கருவியாக அமையும் தத்துவங்களை உரைக்கின்றன.
8. ஐம்பூதங்களைக் குறிக்கும் வித்து எழுத்துக்கள் அல்லது பீஜ அட்சரம் என்று எதனை அழைக்கிறோம்?
- வரயஅல
- லவரயஅ
- அவரயல
9. பீஜ அட்சர எழுத்துக்களில் "ர" எந்த பூதத்தைக் குறிக்கிறது?
- ஆகாயம்
- காற்று
- தீ
10. ஐம்பூதங்களுக்குரிய அதிதெய்வங்கள் யாவர்?
- பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசர், அயன்
- அயன், திருமால், உருத்திரன், மகேசர், சதாசிவர்
- பிரம்மன், திருமால், ஈசன், மகேசர், சதாசிவர்
11. அதிதெய்வங்கள் மூலம் இறைவன் ஆற்றும் ஐந்தொழில்கள் யாவை?
- படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
- படைத்தல், காத்தல், அழித்தல், ஒடுக்குதல், அருளல்
12. படைத்தல் தொழில் என்பது இறைவன் உயிர்களைப் படைத்தல் ஆகும்.
- ஆம்
- இல்லை
13.உயிர்களிடத்தில் நடைபெறும் இரண்டு ஐந்தொழில்கள் யாவை ?.
- படைத்தல், காத்தல்
- மறைத்தல், அருளல்
- அழித்தல், காத்தல்
14.அதிதெய்வம் மகேசுவரன் எந்த தொழிலை செய்கிறார் ?
- காத்தல்
- மறைத்தல்
- அழித்தல்
15.அருளல் தொழிலின் பொருள் யாது ?
- உயிர்களுக்கு துன்பம் நீக்கி, இன்பத்தை அருளுவதே அருளலாகும்.
- உயிர்களுக்கு பாசத்தை நீக்கி, பேரின்பத்தை அருளுவதே அருளலாகும்.
16.இறைவன் உயிர்களுக்கான உடல் முதலாகிய கருவிகளை எவ்வாறு படைக்கிறார் ?
- மாயையில் இருந்து படைக்கிறார்
- நேரடியாகப் படைக்கிறார்
17.ஆகாயத்திற்கான அதிதெய்வம் யார்?
- மகேசுவரன்
- உருத்திரன்
- சதாசிவன்
18. ஆன்ம தத்துவங்கள் 24 யை குறிப்பிடுக?
- ஐம்பூதங்கள் 5, தன்மாத்திரைகள் 5, ஞானேந்திரியங்கள் 5, கன்மேந்திரியங்கள் 5, அந்தக்கரணங்கள் 4
- புலன்கள் 5, சூட்சும பூதங்கள் 5, அறிதற்கருவிகள் 5, தொழில்கருவிகள் 5, அந்தக்கரணங்கள் 4
19. ஐம்புலன்களை குறிப்பிடுக ?
- செவி, தோல், கண், நாக்கு, மூக்கு
- ஓசை, உரு, ஊறு, சுவை, நாற்றம்
20. ஐம்புலன்களுக்கும், ஐம்பொறிகளுக்குமான வித்தியாசம் காண்க ?
- புலன் என்பது உடலால் நடைபெறும் தொழில். பொறி என்பது கருவி. [ வாய் எனும் கருவி, வசனித்தல் எனும் தொழில் செய்கிறது]
- புலன் என்பது பண்பு. பொறி என்பது அந்த பண்பு உணரப்படும் இடம். [ நாக்கு என்ற பொறியால், சுவை என்ற புலன் உணரப்படுகிறது]
21. எதனை வென்றால் இன்பவீடு செல்லலாம் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்?
- ஐம்பொறிகளை வென்றால் இன்பவீடு செல்லலாம்.
- ஐம்புலன்களை வென்றால் இன்பவீடு செல்லலாம்.
22. வித்தியா தத்துவங்கள் 7 யை தேர்ந்தெடுக்க.
- காலம், நியதி, கலை, கருணை, அராகம், புருடன், மாயை
- காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை
23. பெற்றவர்கள் செய்யும் புண்ணியசெயலின் நற்பயன் பிள்ளைகளைச் சேருமா?
- சேரும். பெற்றவர்களின் புண்ணிய செயல், பிள்ளைகளை வினைகளில் இருந்துக் காக்கும்.
- சேராது. நியதி தத்துவப்படி, நல்வினை தீவினைப் பயன் உரியவரை மட்டுமே சேரும்.
24. குழந்தைக்கு ஒன்றைக் கற்பிக்கும் போது, குழந்தை அதை எளிதில் விளங்கிக் கொள்வது, எந்த தத்துவத்தால் நிகழ்கிறது ?
- அராகம்
- வித்தை
25. அராக தத்துவம் என்ன செய்கிறது ?
- உயிர் தான் வேண்டியதைப் பெறும் படி உதவும்
- உயிருக்கு தான் பெறாத பொருளின் மேல் இச்சையை உண்டாக்கும்.
26. அசுத்த மாயை என்றால் என்ன ?
- நிலையில்லாத பொருட்களை நிலையெனக் கருதி,மயக்கத்தை செய்வது அசுத்த மாயை.
- உயிருக்கு தான் பெறாத பொருளின் மேல் இச்சையை உண்டாக்கும்.
27. சிவ தத்துவத்தின் வேறு பெயர்கள் யாவை?
- ஆன்ம தத்துவம், ஞான தத்துவம்
- சுத்த தத்துவம், பிரேரக காண்டம், பிரேரக தத்துவம்
28. ஐந்து சுத்த தத்துவங்கள் யாவை?
- சுத்த வித்தை, ஈசுரம், நியதி, சத்தி, சிவம்
- சுத்த வித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம்
29. ஆறாறு தத்துவங்களும் தன்னைத்தானே அறியும்.
- சரி
- தவறு
30. சுத்த வித்தை தத்துவம் எவ்வாறு அமையும் ?
- ஞானம் மிகுந்து கிரியை குறைந்திருக்கும்
- கிரியை மிகுந்து ஞானம் குறைந்திருக்கும்
31. ஆணவமலம் என்றால் என்ன?
- ஆன்மாவின் அறிவை மறைத்து, அறியாமையைத் தந்து நிற்பது ஆணவமலம்.
- ஆன்மாவிற்கு இன்பதுன்ப அனுபவங்களை விளைவித்து வருவது ஆணவமலம்.
32. ஆணவம், கன்மம் என்ற இருமலங்களும் ஒன்றே.
- தவறு
- சரி
33. ஆன்மாவிற்கு இன்பதுன்ப அனுபவங்களை விளைவித்து தருவது எது?
- கன்மம்
- ஆணவம்
34. ஆன்மாவின் இயல்பு எவ்வாறு இருக்கும் என்று ஆசிரியர் உரைக்கிறார்?
- கருவி கரணங்களோடு சேர்ந்து அறிவைப் பெற்று, இறைவனை வழிபடுவது ஆன்மாவின் இயல்பு.
- அறிவில்லாதப் பொருட்களோடு சேர்ந்து அறியாமையை பெற்றும், திருவருளோடு சேர்ந்து அறிவைப் பெற்றும் நிற்பது ஆன்மா.
35. நற்றவத்தோர் என்று ஆசிரியர் யாரைக் குறிப்பிடுகிறார் ?
- உண்மைச் சரியை, கிரியை,யோகம் ஆகியவற்றைச் செய்தோர்
- தொடர்ந்து சைவ சிந்தாந்த நூல்களைச் சிந்திப்பவர்
36. அருள்மூர்த்தி இறைவனின் எந்த வடிவத்தைக் குறிக்கிறது ?
- திருவருட்சத்தியாகிய சிவகாம சுந்தரியை இடப்பால் கொண்ட வடிவம்
- கூத்தபிரான் வடிவம்
37. ஊன நடனத்தில் இறைவன் ஆற்றும் மூவகை ஐந்தொழில்கள் யாவை ?
- மாயையை நீக்குதல், வல்வினையை சுடுதல், திருவருளை வழங்குதல்
- தூல ஐந்தொழில், சூக்கும ஐந்தொழில், அதிசூக்கும ஐந்தொழில்
38. ஊன நடனம் கண்டு பயன்பெற்ற உயிர்கள் எதனைப் பெற்று ஞானத்தை அடைய முயலும்?
- இருவினை ஒப்பும், மல பரிபாகமமும் பெற்று.
- ஞான நடனம் கண்டு, ஞானத்தைப் பெறும்.
39. "இருவினை ஒப்பு" என்றால் என்ன?
- நல்வினைப் பயனால் வரும் இன்பத்தையும், தீவினைப் பயனால் வரும் துன்பத்தையும் சமமாகக் கருதி அனைத்தும் திருவருள் என்று எண்ணுவது.
- இன்பத்தின் மீது விருப்பையும், துன்பத்தையும் மீது வெறுப்பையும் கொண்டு இரண்டையும் வெவ்வேறாய் நோக்குவது.
40. "சிவாயநம" வில் "ய" எழுத்து எதனைக் குறிக்கிறது?
- ஆணவமலம்
- உயிர்
41. "ஆதிமலம் இரண்டும் ஆதியா ஓதினால்
சேதியா மும்மலமும் தீர்வாகா" என்பதன் பொருள் யாது?
- திரோதான சத்தியைக் குறிக்கும் நகாரத்தையும், ஆணவ மலத்தைக் குறிக்கும் மகாரத்தையும் முன்பாக வைத்து நமசிவாய என்று ஓதினால் மும்மலங்களை களைய முடியாது.
- "சி" முதலாக கொண்டு சிவாயநம என்று ஓதினால் மும்மலங்களை களைய முடியாது.
42. பெருமான் ஞான நடனத்தில், ஆன்மாக்களுக்கு உடுக்கை ஏந்திய திருக்கரத்தினாலும், தீயேந்திய கையினாலும் எவ்வகையில் அருள் செய்கிறார்?
- உடுக்கையேந்திய கையில் மாயைதனை உதறி, தீயேந்திய கையில் வல்வினையைச் சுட்டு அருள் செய்கிறார்
- உடுக்கையேந்திய கையில் படைத்தலைச் செய்து, தீயேந்திய கையில் மறைத்தலைச் செய்து அருள் செய்கிறார்
43. இறைவன் மூன்று விதமாக நடனம் ஆடுகிறார் ?
- சரி
- தவறு
44. "சிவாயநம என்னும் திருவெழுத்(து) அஞ்சாலே
அவாயமற நின்றாடுவான்" இதன் பொருள் யாது ?
- கூத்தபிரான் சிவாயநம எனும் ஐந்தெழுத்தை திருவுருவில் கொண்டு, ஆன்மாக்களின் பிறவி நீக்க நடனம் செய்கின்றான்.
- இறைவன் சிவாயநம எனும் ஐந்தெழுத்தை திருவுருவில் கொண்டு, ஆன்மாக்கள் இன்புற நடனம் செய்கின்றான்.
45. சூக்கும பஞ்சாக்கரம் என்று எதனை அழைக்கிறோம்?
- சிவாயநம
- நமசிவாய
46. இறைவனின் மூன்று வகை இயல்புகள் யாவை ?
- ஒன்றாதல், வேறாதல், உடனாதல்
- ஒன்றாதல், பிறப்பற்றல், வேறாதல்
47. ஞாயிறு கண்ணுக்கு வேறாய் நின்று, கண்ணொளியோடு சேர்ந்து, பிற பொருட்களைக் காட்டுவது இறைவனின் எந்த இயல்பிற்கு உவமையாகிறது?
- வேறாதல்
- ஒன்றாதல்
48. "பரை" என்பதன் பொருள் யாது?
- பராசத்தி
- இசை
49. ஆன்மா ஆணவமலம் நீங்கி கொள்வதற்கு, ஐந்தெழுத்தை எவ்வாறு ஓத வேண்டும் என்கிறார் நூலாசிரியர்?
- சிவாயநம
- நமசிவாய
50. ஆகமங்கள், வேதங்கள் ஆகியவை எதன் விளக்கமே என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
- ஐந்தெழுத்து
- சித்தாந்தம்
51. அணு என்பது எதனைக் குறிக்கிறது?
- திருவருள்
- ஆன்மா
52. மலரும், மனமும் ஒன்றில் ஒன்று அடங்கியிருத்தல், இறைவனின் எந்த இயல்பிற்கு உவமையாகிறது?
- ஒன்றாதல்
- வேறாதல்
- உடனாதல்
53. "முத்திதனில் சித்தமலம் அற்றார் செறிந்திடுவர்" என்பதன் பொருள் யாது ?
- முத்தி அடைந்து, மீண்டும் பிறக்கும் வாய்ப்பினை பெறுவர்
- முத்தி நிலையில் ஆணவமலம் அற்றவர்கள், சிவனிடத்தில் இரண்டறக் கலந்திருப்பார்கள்
54. முத்தியடைந்தோர் நிலை, எவ்வாறு இருக்கும் என ஆசிரியர் கூறுகிறார்?
- வானமும், நிலமும் போல வெவ்வேறாய் உயிரும் சிவமும் பிரிந்திருக்கும்.
- வீணையும், நாதமும் போல பிரிவில்லாமல் இறைவனோடு கலந்து இருக்கும்.
55. மனவாசகம் கடந்தாரின் ஆசிரியர் மெய்கண்டாரின் இயற்பெயர் யாது?
- சுவேதவனப் பெருமாள்
- கச்சியப்பர்
56. மெய்கண்டார் அவதரித்த, தடுத்தாட்கொண்டார் வீற்றிருக்கும் தலம் எது?
- திருவாதவூர்
- திருவெண்ணெய்நல்லூர்
57. நாம் சிந்தாந்த நூல்களை, இறைவன் அளித்த கருவிகளால் எங்கிருந்தோ இணையத்தின் வழி கேட்பது நமது முந்தய தவப்பயன்.
- தவறு
- சரி
58. உடலில் இருந்து உயிர் பிரியும் மரணமே முத்தியாகும்.
- ஆம்
- இல்லை
59. முத்தி என்பது யாது ?
- இறந்து, மீண்டும் புதுபிறவியில், இப்போது பெற்றதைக் காட்டிலும் சிறந்த கருவி கரணங்களைப் பெறுவது.
- பிறவாமை பெற்று, உயிர் சிவத்தில் கலந்து பேரின்பத்தை அடைவது.
60. உண்மை விளக்கம் நமக்கு உணர்த்திய உண்மைகளை தேர்ந்தெடுக்கவும்? (ஒன்றிற்கு மேற்பட்ட விடைகள்,அனைத்தையும் தேர்ந்தெடுக்க)
- உடல் முதலிய கருவி கரணங்கள், வினைகளை அனுபவித்து தீர்ப்பதற்காக உயிருக்கு இறைவனால் கொடுக்கபட்டது.
- உயிருக்கு நல்வினைப் பயன், நல்ல நேரம் பார்த்து காரியங்களை செய்வதால் நிகழ்கிறது
- நேற்றைய தவம், இன்றைக்கு திருஐந்தெழுத்து ஓதி, திருநீற்றை அணியும் வாய்ப்பு.
- இன்றைய துன்பம், நேற்றைய தீவினையின் பயன்.
- கேவல நிலை என்பது உயிர் கருவி, கரணங்களைப் பெற்று தனிமையில் இருப்பது.
- சகலநிலையில், உயிருக்கு கருவி கரணங்கள் முத்தி நிலையை அடைவதற்கு உதவும்.
- சிந்தாந்த நூல்கள் நமக்கு பதிபசுபாசம் எனும் முப்பொருள் உண்மையை விளங்கச் செய்யும்.
சைவ சித்தாந்தம்: உண்மை விளக்கம்
